Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரூ.500 கோடி வசூலைக் கடந்த #Devara திரைப்படம்!

03:54 PM Oct 13, 2024 IST | Web Editor
Advertisement

செப். 27-ம் தேதி வெளியான தேவரா திரைப்படம் உலகளவில் ரூ.500 கோடி வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துளளது.

Advertisement

டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பின் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள திரைப்படம் ‘தேவரா’. இப்படம் கடந்த செப். 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக கால் பதித்துள்ளார். யுவசுதா ஆர்ட்ஸ்ட் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் கடந்த செப்.27ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

https://twitter.com/DevaraMovie/status/1845328131089105356?ref_src=twsrc^tfw

தேவரா திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகலளவில் ரூ.172 கோடி வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது. இந்த நிலையில், இத்திரைப்படம் உலகளவில் ரூ.500 கோடி வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துளளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் உருவாகுகிறது.

Tags :
anirudhbox officecinemaDevaraJr NTRmoviemovie updatenews7 tamil
Advertisement
Next Article