Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"கோட்சேவின் சந்ததியினர் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்"- கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா

04:21 PM Jan 30, 2024 IST | Web Editor
Advertisement

"நாதுராம் கோட்சேவின் சந்ததியினர் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்" என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Advertisement

கடந்த 26-ம் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கெரகோடு கிராமத்தில் இந்து அமைப்பினர் 108 அடி உயர கம்பத்தை நட்டு அதில் அனுமன் கொடி ஏற்றினர்.   கெரகோடு கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தின் அனுமதியை பெறாமல் அனுமன் கொடியை ஏற்றியதாக கூறப்படுகிறது.   இதற்கு அதே கிராமத்தை சேர்ந்த சிலர், “அரசு இடத்தில் தேசியக் கொடி, கன்னட கொடி தவிர வேறு கொடிகளை ஏற்ற அனுமதி இல்லை.

எனவே அதனை அகற்ற வேண்டும்” என‌ கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் மண்டியா மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொது இடத்தில் அனுமதி இல்லாமல் ஏற்றப்பட்ட அனுமன் கொடியை அகற்றினர்.  மேலும் அந்த 108 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றினர்.

அப்போது பாஜக, மஜத, பஜ்ரங் தளம் ஆகிய அமைப்பினர் போராட்டம் ந‌டத்தினர்.  மேலும் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.  இதனால் போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.  தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

கெரகோடு கிராமத்தில் பாஜக,  மஜத,  பஜ்ரங் தளம் ஆகிய அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.  இதன் காரணமாக அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக வலியுறுத்தியது என்ன? – டி.ஆர்.பாலு பேட்டி!

கர்நாடக பாஜக, மஜத தலைவர்கள் அங்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தசம்பவத்தை கண்டித்து கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு, மங்களூரு உள்ளிட்ட இடங்களில் பாஜகவினர் நேற்று (ஜன.29) போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் மகாத்மா காந்தியின் 76-வது நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் சித்தராமையா காந்தி உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.  இதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவின் சந்ததியினர் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.  பின்னர் அனுமன் கொடி ஏற்றியது தொடர்பாக அவர் கூறியதாவது:

"எங்களுக்குள்ளேயே கோட்சேவை வணங்குபவர்களும்.  மகாத்மா காந்தியை பற்றி தவறாக பேசுபவர்களும் இருக்கிறார்கள்.  அவர்கள் கோட்சேவின் சந்ததியினர், மாநிலத்தில் வன்முறையைத் தூண்ட முயற்சிக்கின்றனர்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
BengaluruflagKarnatakamahatma gandhiSiddaramaiah
Advertisement
Next Article