கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து 100 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று மாலை புதுச்சேரி – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கிறது. இந்த புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் வசித்த 193 பேர் அழைத்து வரப்பட்டு, 8 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் 1,700 மோட்டார் பம்புகளை கொண்டு மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.