Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நச் பதில்!

12:49 PM Aug 05, 2024 IST | Web Editor
Advertisement

அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கும் கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர பழுக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். 

Advertisement

கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை திமுக உறுதிபடுத்தவில்லை. கடந்த ஜூலை 20-ம் தேதி திமுக இளைஞரணி கூட்டத்தின் போது இதுகுறித்து அமைச்சர் உதயநிதி பேசும் போது, துணை முதலமைச்சர் பதவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அவர், “ஒவ்வொரு அமைச்சரும் முதலமைச்சருக்கு துணையாகத்தான் இருப்போம். எந்த பதவி வந்தாலும் இளைஞரணி பதவியே எனக்கு மிகவும் நெருக்கமானது. இதையேதான் முதலமைச்சர் ஏற்கெனவே கூறியுள்ளார். அதையே தான் நானும் சொல்கிறேன்” என விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதி வீனஸ் நகர் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பல்வேறு திட்டங்களை ஆய்வு மேற்கொண்டார். அப்போதுசெய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்போவதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லை” என பதிலளித்தார்.

தொடர்ந்து, சென்னையில் சிறிதளவு பெய்யும் மழைக்கே தண்ணீர் தேங்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுவதாக கேட்கப்பட்டது. அதற்கு, “எந்த அளவு மழை பெய்தாலும் அதை எதிர் கொள்ளக்கூடிய அளவில் தயார் நிலையில் உள்ளோம். சென்னையில் எங்கு தண்ணீர் தேங்குகிறது என ஒரு இடத்தையாவது எதிர்கட்சிகள் காட்ட வேண்டும். அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்” இவ்வாறு முதலமைச்சர் பதிலளித்தார்.

Tags :
Chennai rainsCMO TamilNadudeputy cmDMKMK StalinNews7Tamilnews7TamilUpdatesUdhaiyanithi Stalin
Advertisement
Next Article