Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘கருடன்’ படம் பார்க்க அனுமதி மறுப்பு! அரசு வாகனத்தில் அழைத்து சென்ற வட்டாட்சியர்!

03:16 PM Jun 01, 2024 IST | Web Editor
Advertisement

‘கருடன்’  திரைப்படம் பார்க்க நரிக்குறவர் இன மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில்,  வட்டாட்சியர் மூலம் அரசு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதுபடம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.

Advertisement

வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள திரைப்படம்  ‘கருடன்’.  இந்த திரைப்படத்தை ‘எதிர் நீச்சல்’,  ‘காக்கிச் சட்டை’,  ‘கொடி’,  ‘பட்டாசு’  உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.  இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சசிகுமார்,  உன்னி முகுந்தன்,  ஷிவதா,  ரோஷினி ஹரிபிரியன்,  சமுத்திரக்கனி, மைம் கோபி,  ஆர்.வி.உதயகுமார்,  வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தை பார்க்க கடலூர் “நியூ சினிமா” திரையரங்கத்திற்கு சென்ற நரிக்குறவ மக்கள் அனுமதிக்கப்படவில்லை என புகார் எழுந்தது. 20க்கும் மேற்பட்ட நரிக்குறவ மக்கள் குடும்பத்துடன் இன்று திரைப்படம் பார்க்க சென்றுள்ளனர்.  ஆனால் அவர்களை திரையரங்கிற்குள் அனுமதிக்க திரையரங்கத்தினர் மறுத்துள்ளனர்.

இதனையடுத்து பலமுறை அவர்கள் கேட்டும் டிக்கெட் வழங்க நிர்வாகம் மறுத்துள்ளது.  இதுதொடர்பாக கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  அவர்களை கோட்டாட்சியரிடம் மனு அளிக்க காவலர்கள் அனுப்பி வைத்தனர்.

இதையும் படியுங்கள் : ஸ்டார்பக்ஸால் மில்லியன் கணக்காக ஃபலோவர்ஸை இழந்த கே -பாப் குழு!

இந்நிலையில்,  நரிக்குறவ மக்களுக்கு திரையரங்கில் டிக்கெட் மறுக்கப்பட்ட நிலையில்  கோட்டாட்சியரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், வட்டாட்சியர்  பலராமன் மூலம் அரசு வாகனத்தில் நரிக்குறவர் இன குழந்தைகள் அழைத்து வரப்பட்டு படம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.

Tags :
CrimeCuddaloreNarikuravaUntouchability
Advertisement
Next Article