Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டெல்லி மேயர் தேர்தல் - 3 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வெற்றி!

07:19 AM Nov 15, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லியில் நேற்று நடைபெற்ற மேயர் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மகேஷ் குமார் கிச்சி வெற்றி பெற்றார்.

Advertisement

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளர் கிஷன் லாலுக்கும், ஆம் ஆத்மி வேட்பாளர் மகேஷ் குமார் கிச்சிக்கும் கடுமையான போட்டி நிலவியது. மொத்தம் பதிவான 265 வாக்குகளில் 2 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள வாக்குகளில் ஆம் ஆத்மி வேட்பாளர் மகேஷ் குமார் 133 வாக்குகளைப் பெற்றார். பாஜக வேட்பாளர் 130 வாக்குகளைப் பெற்றார்.

இதன்மூலம் 3 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் மகேஷ் குமார் கிச்சி வெற்றிப் பெற்றார். டெல்லி மாநகராட்சியை ஆளுவதில் பாஜகவுடன் நீண்டகாலமாக மோதல் இருந்த நிலையில், ஆம் ஆத்மியின் வெற்றி முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த வெற்றியின் மூலம் மூன்றாவது தலித் மேயர் என்ற பெருமையை மகேஷ் பெற்றார்.

இதற்கிடையில் இந்த மேயர் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை மட்டுமே பதவியில் இருப்பார் என்பதால், காங்கிரஸ் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. அவையில் மீதமிருந்த 8 காங்கிரஸ் கவுன்சிலர்களில், கவுன்சிலர் சபீலா பேகம் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்கப் போவதில்லை எனக் கூறி தனது பதவியைத் துறந்தார். 

புதிய மேயருக்கு குறுகிய பதவிக்காலம் ஏன்?

டெல்லி மாநகராட்சி விதிகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரலில் மேயர் தேர்தல் நடைபெறும் ஐந்தாண்டு காலத்திற்கு, சுழற்சி அடிப்படையில் மேயர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல் ஆண்டில் ஒரு பெண், இரண்டாவது ஆண்டில் Open கேட்டகரி, மூன்றாம் ஆண்டு பட்டியலின பிரிவு, 4 மற்றும் 5 ஆம் ஆண்டுகளில் Open கேட்டகரி என்ற முறையில் மேயர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆம் ஆத்மிக்கும், பாஜகவுக்கும் இடையே நிலவிய மோதல் காரணமாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற இருந்த தேர்தல் தாமதமானது. இதனால் மேயரின் பதவிக்காலம் அதற்கேற்றபடி குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி 2025 ஏப்ரலுடன் மகேஷின் பதவிக்காலம் முடிவடைகிறது.

Tags :
AAPDelhi MayorMahesh Kumar Khichi
Advertisement
Next Article