Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கேப்டன் நியமனம்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
04:08 PM Mar 14, 2025 IST | Web Editor
featuredImage featuredImage
Advertisement

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில்  கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

Advertisement

இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் மட்டும் கேப்டனை அறிவிக்காமல் இருந்தது. கடந்த சீசனில் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட், ஏலத்தில் லக்னோ அணிக்கு சென்று விட்டார். இதனால் ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்ட விக்கெட் கீப்பரான லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையே, அவர் கேப்டன்ஷிப் வாய்ப்பை நிராகரித்து விட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை வீடியோ வெளியிட்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணி அறிவித்துள்ளது.

Tags :
Cricketdelhi capitalsIPLIPL 2025news7 tamilNews7 Tamil UpdatesSportsSports Update
Advertisement