காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம்!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 6ம் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், மியான்மர் நாட்டு கடலோர பகுதியில் அப்போது நிலவி வந்த காற்றின் சுழற்சியின் காரணமாக, தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய அந்த காற்றழூத்த தாழ்வு பகுதி தடைபட்டது.
இந்நிலையில், இப்போது தென்மேற்கு வங்க கடல் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும். அது தமிழகத்தை நெருங்கி வந்து இன்று முதல் அதிக அளவிலான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படியுங்கள் : “நமது முதல் இந்திய சூப்பர் டீச்சர்” – ‘சக்திமான்’ பட டீசர் வெளியீடு!
இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகுக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில், தமிழ்நாடு, இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.