Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முதலமைச்சர் குறித்து அவதூறு: அதிமுக எம்பி சி.வி.சண்முகம் மீது 3-வது அவதூறு வழக்கு!!

04:48 PM Dec 20, 2023 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு அரசையும், முதலமைச்சரையும் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட  3-வது வழக்கில் அதிமுக எம்பி சி.வி.சண்முகம் ஜனவரி 4-ம் தேதி ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு அரசையும்,  முதலமைசரையும் அவதூறாக பேசியதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் மீது 2 வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் 2 முறை ஆஜராகினார். தொடர்ந்து டிசம்பர் 21-ம் தேதி ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள்: தென்மாவட்டங்களில் பெய்த கனமழை வெள்ளத்தில் மூழ்கி அழுகும் நெல், வாழை பயிர்கள்!

இதனை தொடர்ந்து டிச.21-ம் தேதியான நாளை மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.  இந்த நிலையில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே கடந்த ஜீன் மாதம் அதிமுக கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசையும்,  முதலமைச்சரையும் அவதூறாக பேசியதாக அரசு வழக்கறிஞர் சுப்ரமணியன் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3-வது வழக்காக மனு தாக்கல் செய்தார்.   இந்த வழக்கினை நீதிபதி பூர்ணிமா விசாரணை செய்தார்.  தொடர்ந்து சி.வி.சண்முகம் ஜனவரி மாதம் 4-ம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளார்.

Tags :
#ViluppuramADMKCHIEF MINISTERDMKnews7 tamilNews7 Tamil UpdatesShanmugamtamil nadu
Advertisement
Next Article