Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சோமேட்டோவுக்கு வயது 16! மனைவி, பள்ளிக்குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய தீபிந்தர் கோயல்!

02:09 PM Jul 10, 2024 IST | Web Editor
Advertisement

ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான  சோமேட்டோவின் 16வது பிறந்தநாளை,  அந்த நிறுவனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல் அவரது மனைவி மற்றும் பள்ளிக் குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். 

Advertisement

ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான சோமேட்டோ கடந்த 2008ஆம் ஆண்டு தீபிந்தர் கோயலால் தொடங்கப்பட்டது. தீபிந்தர் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர். இன்று இந்நிறுவனம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் வணிகம் செய்து வருகிறது. சோமாட்டோவின் சந்தை மதிப்பு ரூ.1.40 லட்சம் கோடி இருக்கும். தீபிந்தர் கோயலின் மொத்த சொத்து மதிப்பு 2570 கோடி ரூபாய் ஆகும்.

இந்நிலையில் சோமேட்டோவின் 16வது பிறந்தநாளை சோமாட்டோ ஊழியர்கள் கொண்டாடி வருகின்றனர். சோமேட்டோ தொடங்கி இன்றுடன் 16 ஆண்டுகள் ஆகின்றன. இதனை அந்நிறுவனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல் மற்றும் அவரது மனைவி, பிளிங்கிட் நிறுவனத்தின் சிஇஓ அல்பிந்தர் திந்த்சா மற்றும் பள்ளிக் குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்களை தீபிந்தர் கோயல் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Tags :
Albinder DhindsaBlinkitDeepinder GoyalHappy 16th Zomatozomato
Advertisement
Next Article