Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மும்பையில் #DeepikaPadukone வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பின் விலை என்ன தெரியுமா?

04:25 PM Sep 18, 2024 IST | Web Editor
Advertisement

மும்பையின் பாந்த்ரா வெஸ்ட் பகுதியில்  தீபிகா படுகோனின் நிறுவனம்  ரூ.17.8 கோடிக்கு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தீபிகா படுகோன் திரையுலகில் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். பாலிவுட் சினிமாவில் நடிகர் ஷாருக்கான் நடிகர் சல்மான்கான் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் வெற்றி படங்களை கொடுத்த ஒரு நடிகை தீபிகா. 2023 ஆம் ஆண்டில் ஷாருக்கானுடன் பதான், ஜவான் என இரண்டு படங்களில் இவர் நடித்திருந்தார். அது மட்டுமின்றி இந்த ஆண்டில் கல்கி 2898 ஏடி படத்திலும் தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரன்வீர் சிங்கை காதல் திருமணம் செய்து கொண்ட தீபிகா படுகோன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய கர்ப்பத்தை சமூக வலைத்தளங்களில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் செப்டம்பர் 8 ஆம் தேதி தீபிகா ரன்பீர் தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து நடிகர் ஷாருக்கான், தொழிலதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று தீபிகா படுகோனை நலம் விசாரித்தனர். பல பாலிவுட் பிரபலங்களும் திரையுலக நட்சத்திரங்களும் தீபிகா - ரன்வீர் தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இதனை தொடர்ந்து செப்டம்பர் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடிகை தீபிகா படுகோன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தன்னுடைய குழந்தையுடன் அலிபாக்கில் அவர்கள் புதிதாக வாங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அலிபாக் குடியிருப்பை ரூ.17.8  கோடிக்கு தீபிகா படுகோன் ரன்வீர் சிங் தம்பதி வாங்கியுள்ளனர். இந்த பகுதியில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் பலரும் வீடு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதி மிகவும் அமைதியான சூழ்நிலையில் இருப்பதால் தன்னுடைய குழந்தையுடன் நடிகை தீபிகா அழகான நேரத்தை செலவிட இந்த குடியிருப்பை வாங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

Tags :
BandraDeepika padukonereal estate
Advertisement
Next Article