ஆழமான.. வலிமையான.. அற்புதம் கொட்டுக்காளி.. - #DirectorBala பாராட்டு!
ஆழமான இக்கதையை, எளிமையாகவும் வலிமையாகவும் எடுக்க முடியும் என்று களமாடி, ஓர் அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள் என கொட்டுக்காளி திரைப்படத்தின் குழுவிற்கு இயக்குநர் பாலா பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
கூழாங்கல் திரைப்பட இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது கொட்டுக்காளி திரைப்படம். இப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மலையாள நடிகை அன்னா பென் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
பெர்லின் சர்வதேச திரைப்பட விழா என பல சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மூட நம்பிக்கை, ஆணாதிக்கம் மற்றும் சிக்கலான மனித உணர்வுகள் குறித்து இப்படம் பேசும் என இயக்குநர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கொட்டுக்காளி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை பார்த்த பலரும் சூரி மற்றும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இயக்குநர் பாலா கொட்டுக்காளி திரைப்படத்தை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது..
இயக்குநர் வினோத்ராஜ் குறிப்பாக, சூரி தனது கதாப்பாத்திரத்தை உணர்ந்து. ஆர்ப்பாட்டமும் அமைதியும் ஒரு சேர இணைந்த நடிப்பை வெளிப்படுத்தி, ஒரு நடிகராகத் திரையுலகில் ஆழ்ச்சுவடு பதித்து தாண்டவமாடியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. படத்தின் தலைப்பிற்கே நியாயம் சேர்க்கும் வகையில், மிக அழுத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார் நாயகி, அன்னா பென்.