4 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் வருமான வரி விலக்கு! எங்கு தெரியுமா?
ஹங்கேரியில் குறைந்து வரும் மக்கள்தொகையால், 4 குழந்தைகள், அதற்கு மேல் குழந்தைகள் இருக்கும் பெற்றோர்கள் வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு என அந்நாட்டு அரசு அறிவித்தது.
ஐரோப்பாவில் குழந்தைகள் பிறக்கும் எண்ணிக்கை மிக அதிமான அளவில் குறைந்துள்ளது. பிற ஐரோப்பிய நாடுகளைப் போலவே ஹங்கேரியும் பிறப்பு விகிதம் குறைவதால் அந்நாட்டு அரசு சவாலை எதிர்கொண்டு வருகிறது. மக்கள்தொகை வீழ்ச்சியை மாற்றியமைக்க, பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஹங்கேரி அரசு சில நடவடிக்கைகளை அறிவித்தது.
இது தொடர்பாக ஹங்கேரி நாட்டின் பிரதமர் விக்டர் ஓர்பன் தெரிவித்ததாவது :
“ஐரோப்பாவில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளன. இதனால், நாட்டில் மக்கள்தொகை எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. இதனால், குறைந்தபட்சம் 4 குழந்தைகள் அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை வளர்க்கும் பெற்றோருக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : அதிக போதைக்காக விஷச்சாராயத்தில் மினரல் டர்பன்டைன் ஆயில் கலப்பு - குற்றவாளிகள் அதிர்ச்சி வாக்குமூலம்!
பெரிய குடும்பங்களுக்கு வசதியான மற்றும் ஆடம்பரமான கார்களை வாங்குவதற்கு மானியமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகையை அதிகரிக்கும் செயல் திட்டத்திற்கு ஏற்ப 21,000 குழந்தைகள் காப்பகங்கள் திறக்கப்படும்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.