Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

8 இந்தியர்களின் மரண தண்டனை - மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது கத்தார் நீதிமன்றம்..!

07:42 AM Nov 25, 2023 IST | Web Editor
Advertisement

8 இந்தியர்களின் மரண தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த  மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுள்ளது .

Advertisement

இந்திய போர்க் கப்பலின் முக்கிய அலுவலராக செயல்பட்ட கடற்படை அதிகாரி உள்பட 8 பேர் கத்தாரில் உள்ள தாஹ்ரா குளோபல் டெக்கனாலஜிஸ் & கன்சல்டன்ஸி சர்வீசஸ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்த நிறுவனம் கத்தாரின் ஆயுத படைகளுக்கு பயிற்சி மற்றும் அதன் தொடர்புடைய சேவைகளை வழங்கி வந்தது.

இதனிடையே கத்தாரில் இஸ்ரேல் நாட்டுகாக உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கேப்டன் நவ்தேஜ் சிங்க் கில்,  வீரேந்திர குமார் வர்மா,  சவுரவ் வசிஸ்ட்,  அமித் நாக்பால்,  புரந்தேடு திவாரி, சுகுணாகர் பகலா, சஞ்சீவ் குப்தா, ராகேஷ் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் ஜாமீன் கோரிக்கைகள் பலமுறை நிராகரிக்கப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் முன்னாள் கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கும் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அவர்கள் மீது இஸ்ரேல் நாட்டிற்கு கத்தாரின் உளவு தகவல்களை வழங்கியதாக குற்றச்சாட்டுக்களை நீதிமன்றம் முன்வைத்து இந்த தண்டனையை வழங்கியது..

இந்தத் தீர்ப்பு குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்திய மத்திய வெளியுறவு அமைச்சகம், 'கடற்படை அதிகாரிகளின் விடுதலைக்கு சட்ட மற்றும் தூதரக உதவிகள் மூலம் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளும்' எனத் தெரிவித்திருந்தார்.


8 பேரின் குடும்பத்தினரையும் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். இந்தியர்களின் மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கத்தார் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Death sentenceFormer Indian Navy OfficersIndian Navy OfficersNavy OfficersQatarQatar Court
Advertisement
Next Article