Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிவராமன் உயிரிழப்பு - #Krishnagiri மாவட்ட காவல்துறை விளக்கம்!

12:09 PM Aug 23, 2024 IST | Web Editor
Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் தனியார் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான சிவராமன் உயிரிழந்த நிலையில்,  கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை விளக்கமளித்துள்ளது.  

Advertisement

கந்திகுப்பம் தனியார் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான சிவராமன் உயிரிழந்தார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் உயிரிழந்தது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

போலீசார் கைது செய்யும் பொழுது தப்பி ஓடிய சிவராமன் தடுமாறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கடந்த 19.08.2024-ம் கைது செய்யப்பட்ட சிவராமன் எலும்பு முறிவு காரணமாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவராமனை விசாரணை செய்து பரிசோதனை செய்த போது சிவராமன் கைது செய்வதற்கு 2 நாட்கள் முன்பு எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளது தெரிய வந்தது.

இதனை அடுத்து சிவராமன் உயிரை காப்பாற்ற கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் மேல் சிகிச்சைக்காக 21.08.2024 ம் தேதி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த சிவராமன் சிகிச்சை பலன் இன்றி இன்று (23.08.2024) காலை உயிரிழந்தார்.

போலீசார் கைது செய்வதற்கு முன்பு சிவராமன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும் இவர் தனது குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 09.07.2024 ம் தேதி எலி மருந்து சாப்பிட்டு TCR மருத்துவமனை கிருஷ்ணகிரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Sexual harassmentSivaramanSpecial Investigation Team
Advertisement
Next Article