Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டிபி வேர்ல்டு ILT20 சீசன் 2 சர்வதேச லீக் போட்டிகள் நாளை தொடக்கம்!

09:33 PM Jan 18, 2024 IST | Web Editor
Advertisement

டிபி வேர்ல்டு சர்வதேச லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை (ஜனவரி 19) முதல் தொடங்குகிறது.

Advertisement

முதல் முறையாக கடந்த ஆண்டு டிபி வேர்ல்டு சர்வதேச லீக் டி20 தொடர் நடத்தப்பட்டது. இந்த சர்வதேச லீக் டி20 போட்டிகள் நாளை முதல் தொடங்கி பிப்ரவரி 17 வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்பதுடன், 34 போட்டிகள் நடைபெறவுள்ளன. அதில் துபாய் 15 போட்டிகளையும், அபு தாபி 11 போட்டிகளையும், ஷார்ஜா 8 போட்டிகளையும் நடத்தவுள்ளது.

இந்த போட்டிகளில் அண்மையில் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டேவிட் வார்னர், நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் டிரண்ட் போல்ட் மற்றும் அம்பத்தி ராயுடு போன்ற முக்கிய வீரர்கள் பங்குபெற்று விளையாடுகின்றனர். அம்பத்தி ராயுடு மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காக விளையாடுகிறார். டேவிட் வார்னர் துபாய் கேப்பிடல்ஸை கேப்டனாக வழிநடத்துகிறார்.

டிபி வேர்ல்டு சர்வதேச லீக் டி20 தொடரில் சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல், கோரி ஆண்டர்சன், டிவைன் பிராவோ, தசுன் ஷானகா, ரஹ்மனுல்லா குர்பாஸ், சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லே, அலெக்ஸ் ஹேல்ஸ், டாம் கரண், ரோவ்மன் பௌவல், ஷிம்ரன் ஹெட்மேயர், கிறிஸ் வோக்ஸ் மற்றும் மார்டின் கப்டில் போன்ற முக்கிய வீரர்கள் இடம்பெற்று விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

Tags :
CricketDP WorldILT 20International LeagueNews7Tamilnews7TamilUpdatesSeason 2T20
Advertisement
Next Article