திருவண்ணாமலை தீபத் திருவிழா 4-ம் நாள் | ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்...
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 4-ம் நாள் விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 4-ம் நாள் விழா நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. உற்சவம் பஞ்ச மூர்த்திகள், வெள்ளி காமதேனு கற்பகவிருட்சகம் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா நவம்பர் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் 11 நாட்கள் தீப திருவிழாவில் காலை மற்றும் மாலை அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் அளிப்பர்.
இதையும் படியுங்கள்: “தமிழ்நாடு காங்கிரஸில் என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை”- ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி
இதன் தொடர்ச்சியாக 4-ம் நாள் விழாவான நேற்று இரவு உற்சவத்தில் பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரிஷப காமதேனு கற்பக விருட்சகத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் வரும் 26-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அண்ணாமலையார் கருவறை அருகில் அதிகாலை 4 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்படும். அதனை தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு கோயிலுக்கு பின்புறம் உள்ள 2668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். இதனை காண தமிழகம் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் இருந்து 40 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.