Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டேட்டிங் விவகாரம் - மெளனம் கலைத்த சுப்மன் கில்!

தன்னை பற்றிய டேட்டிங் வதந்திகளுக்கு கிரிக்கெட் சுப்மன் கில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
07:27 PM Apr 26, 2025 IST | Web Editor
Advertisement

இந்திய அணியின் இளம் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்,  நடைப்பெற்று வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை தலைமை தாங்குகிறார்.  அவரது வழிநடத்துதலில் குஜராத் அணி, தற்போது 8 போட்டிகளில் பங்கேற்று 6ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதனிடையே சுப்மன் கில், பிரபலமான சினிமா நடிகைகளுடன் டேட்டிங்  செய்வதாக தகவல் பரவியது. குறிப்பாக பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரின் மகளுடன் அடிக்கடி வெளியில் சென்று டேட்டிங் செய்கிறார் என்ற வதந்தி பரவி வந்தது.

Advertisement

இந்த வதந்திகள் குறித்து தொடர்ந்து மெளனமாக இருந்து வந்த சுப்மன் கில் தற்போது மெளனம் கலைத்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா நடத்திய நேர்காணலில் பேசியதாவது , “நான் கடந்த மூன்று ஆண்டுகளாக தனிமையில் இருக்கிறேன். என்னைப் பற்றி பல ஊகங்களும் வதந்திகளும் பரவி வருகின்றன. என்னை வெவ்வேறு நபர்களுடன் தொடர்புபடுத்தியுள்ளனர்.

சில நேரங்களில் அது மிகவும் வேடிக்கையாக இருக்கும், நான் அந்த நபரைப் பார்த்ததும் இல்லை,  சந்தித்ததில்லை. நான் இந்த நபருடன் இருக்கிறேன், அந்த நபருடன் இருக்கிறேன் என்று கேள்விப்படுகிறேன். இப்போது என் முழு கவனமும் என்  கிரிக்கெட்டில் மட்டும்தான் உள்ளது”

இவ்வாறு கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

Tags :
CricketGujarat TitansShubman Gill
Advertisement
Next Article