அயோத்தி ராமர் கோயிலில் தரிசன நேரம் மாற்றம்!
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் புகழ்பெற்ற ராமர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தினந்தோறும் ஏராளாமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோயிலிககு உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து ஏராளாமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து செய்கின்றனர்.
இதையும் படியுங்கள் : புரோ கபடி லீக் | வெற்றி யாருக்கு? ஹரியானா – ஜெய்ப்பூர் அணிகள் இன்று மோதல்!
இந்த கோவிலில் அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு காலை 7 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. பின்னர் இரவு 9 மணியளவில் நடை அடைக்கப்படும். இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் தரிசன நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரவு 9 மணிக்கு பதிலாக 8.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவுள்ளது. பக்தர்களின் தரிசனத்திற்கு பிறகு நடை அடைக்கப்படும். மேலும், மதியம் 12.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடை அடைக்கப்பட்டு, மதியம் 1 மணிக்கு மீண்டும் திறக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.