Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'ஆபத்தானது, வெட்கக்கேடானாது' - வீடியோ எடுத்த ராகுல் காந்தியை சாடிய ஜகதீப் தன்கர்!

03:25 PM Dec 19, 2023 IST | Web Editor
Advertisement

கிண்டல் செய்த எம்.பி. கல்யாண் பானர்ஜியையும், அவரை கண்டிக்காமல் வீடியோ எடுத்த ராகுல் காந்தியையும் மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் சாடியுள்ளார்.

Advertisement

பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை சேர்ந்த எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் 92 பேர் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (டிச.19) காலை இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்கள் : லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை அதிகாரியின் மடிக்கணினியில் 75 நபர்களின் பெயர் – வெளியான அதிர்ச்சித் தகவல்!

இந்த போராட்டத்தின் போது, திரிணமுல் காங்கிரஸின் எம்பி கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் அவை நடவடிக்கையின் போது செய்வதை போன்று நகைச்சுவையாக அனைவரின் முன்னிலையில் செய்து காட்டினார்.

அங்கிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தனது செல்போனில் இதனை வீடியோ எடுத்தார். கல்யாண் பானர்ஜியின் இந்தச் செயலையும், இதை தடுக்காத ராகுல் காந்தியையும் ஆளும் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாநிலங்களவையில் ஜகதீப் தன்கர் கூறுகையில், "மாநிலங்களவைத் தலைவருக்கும், மக்களவைத் தலைவருக்கும் வேறுபாடு உண்டு. அரசியல் கட்சிகளுக்குள் பரிமாற்றங்கள் இருக்கலாம். ஆனால், மாநிலங்களவைத் தலைவரை கேலி செய்யும் எம்பியை மற்றொரு கட்சியின் மூத்த தலைவர் வீடியோ எடுக்கிறார். இது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஆபத்தானது, வெட்கக்கேடானது." என்று தெரிவித்தார்.

Tags :
Jagdeep dhankarRahulGandhiVideo
Advertisement
Next Article