Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தலித்துகள் ஒதுக்கப்படுகிறார்கள்” - ஆளுநர் ஆர்.என்.ரவி!

“தமிழகத்தில் அதிகமாக பேசப்படுவது சமூகநீதி. ஆனால் தலித்துக்களை இன்றும் ஏற்றத்தாழ்வாக பார்க்கிறார்கள்” என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
05:59 PM Jan 13, 2025 IST | Web Editor
Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடைபெற்ற வள்ளலார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் உரையாற்றியதாவது;

Advertisement

“அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். தமிழகம் வரும் முன்னே வள்ளலார் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டேன். சென்னை ராஜ்பவனில் வள்ளலாருக்கு சிலை வைத்து பூஜை செய்து வருகிறேன். குழப்பமான நேரங்களில் கண்ணை மூடினால், வள்ளலார் வழியை காட்டுகிறார். வள்ளலார் குறித்து தெரிந்துகொள்வதற்கு முன்பு, அவரின் பின்புலத்தை தெரிந்துகொள்ள வேண்டும். நாடு கஷ்டமான சூழலில் இருந்தபோது, அவர் தெய்வீகம் மேற்கொள்கிறார்.

அதர்மம் தலைதூக்கும் போது இதுப்போன்ற ஞானிகள் தோன்றுகிறார்கள். சனாதன தர்மம் அனைவரையும் சமம் என்கிறது. பாரதத்தின் பெரும்பகுதியை ஆங்கிலேயர்கள் உள்ளிட்டோர் தங்களது கைவசம் வைத்திருந்து, அவர்களின் பழக்க வழக்கங்களை புகுத்தினர். பாரதத்தை ஆண்டவர்கள் தான் சாதிகளை புகுத்தினர். வள்ளலார் சாதிகளை எதிர்த்தார். தமிழ் மரபு, “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்கிறது. நம்மிடம் தான் சிவன், பிரம்மன் எல்லோரும் உள்ளனர்.

இந்த உலகத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை. அனைவரிடமும் பக்தி உள்ளது. அதுதான் தெய்வம். பிறரிடம் தெய்வத்தை பார்க்கிற போது எவ்வித வேறுபாடுகளும் நம்மிடம் இருக்காது. ஆங்கிலேயர்கள் நாட்டை ஆண்டபோது, அப்போது  இந்தியாவில் இருந்த கல்விக்கூடங்கள் மூடப்பட்டு, ஆங்கிலம் தான் சிறந்த மொழி என்றார்கள்.  ஆங்கிலேய கல்வி முறையை கொண்டு வந்தார்கள். அதனை எதிர்த்த வள்ளலார், தமிழ் மொழியில் பள்ளிகளை கொண்டு வந்தார். நாம் சிறப்பாக யோசிப்பது தாய்மொழியில் தான் எனக்கூறி தமிழ், சமஸ்கிருதம் மூலம் பாடங்களை பயிற்றுவித்தார்.

விவேகானந்தர் வள்ளாலர் பிறந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்தார். விவேகானந்தர் தமிழகத்தை தேடி வந்தார். அவருக்கு ஞானோதயம் கிடைத்தது கொல்கத்தா என்றாலும், தமிழகத்தில் ஞானிகளை தேடி வந்தார். ஞானோதயம் அடைந்தார். விவேகானந்தருக்கு வழிக்காட்டியாக இருந்தது வள்ளலார். வள்ளலார் தீண்டாமையை எதிர்த்தார்.  புன்னிய பூமியாக தமிழகத்தை நினைத்து அவர் இங்கே வந்து வழிபட்டார்.

நம்மை ஆண்டுக்கொண்டிருப்பவர் மோடி. அவர் சுத்த சைவம். பறவைகள், விலங்குகள் மீது அதிக அன்பு கொண்டவர். வள்ளலார் பிறந்த இந்நாட்டில் சாதிய வேறுபாடுகள் உள்ளது. அதனை முழுமையாக அகற்ற வேண்டும். தமிழகத்தில் அதிகமாக பேசப்படுவது சமூகநீதி. ஆனால் தலித்துக்களை இன்றும் ஏற்றத்தாழ்வாக பார்க்கிறார்கள். நாம் வள்ளலாரை ஏற்றுக்கொண்டு அனைவரையும் சமமாக பார்த்தால் தான் சமூகநீதி சரியாக இருக்கும்.

இந்த உலகத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டுமானால் தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் வள்ளலாரை கொண்டு செல்ல வேண்டும். பள்ளி பாட புத்தகத்திலும் வள்ளலார் குறித்து வகுப்புகள் எடுக்க வேண்டும்” எனப் பேசினார்.

தேசிய கீதத்துடன் தொடங்கப்பட்ட ஆளுநர் நிகழ்ச்சி மீண்டும் தேசிய கீதம் பாடப்பட்டு நிறைவடைந்தது.

Tags :
dalitgovernerRN RaviSocial JusticeTamilNadu
Advertisement
Next Article