Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புரோ கபடி லீக் | தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி!

10:07 PM Dec 01, 2024 IST | Web Editor
Advertisement

புரோ கபடி லீக் போட்டியின் இன்றைய முதலாவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி பெற்றுள்ளது.

Advertisement

11-வது புரோ கபடி லீக் போட்டி ஹைதராபாத்தில் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். லீக்கில் ‘டாப்-2’ இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தன. இதனையடுத்து தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இந்த தொடரில் இன்று (டிச.1) நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – தபாங் டெல்லி அணிகள் மோதின.

இதையும் படியுங்கள் : டி20 போட்டி | ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!

இந்த ஆட்டத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தபாங் டெல்லி அணி ஆட்ட நேர முடிவில் 32-21 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. தபாங் டெல்லி அணி இதுவரை ஆடிய 15 ஆட்டங்களில் 7 இல் வெற்றி பெற்ற நிலையில் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதேபோல், தமிழ் தலைவாஸ் அணி 15 ஆட்டங்களில் 9 இல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

Tags :
Dabang DelhiDefeatedmatchNews7Tamilnews7TamilUpdatesPro Kabaddi LeagueTamil Thalaivas
Advertisement
Next Article