Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மரங்களை வெட்டுவது மனிதர்களைக் கொலை செய்வதை விட மோசமானது” - உச்ச நீதிமன்றம்!

அதிக எண்ணிக்கையிலான மரங்களை வெட்டுவது மனிதர்களை கொலை செய்வதைவிட மோசமான ஒன்று என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
08:19 AM Mar 27, 2025 IST | Web Editor
அதிக எண்ணிக்கையிலான மரங்களை வெட்டுவது மனிதர்களை கொலை செய்வதைவிட மோசமான ஒன்று என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Advertisement

தாஜ் மகாலை சுற்றிய பாதுகாக்கப்பட்ட தாஜ் ட்ரேபீசியம் மண்டலத்தில் 454 மரங்களை வெட்டிய சிவசங்கர் அகர்வால் என்பவரின் மனு, நீதிபதிகள் அபய் எஸ். ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

Advertisement

மதுரா-பிருந்தாவனில் உள்ள டால்மியா பண்ணைகளில் 454 மரங்களை சிவசங்கர் அகர்வால் வெட்டியதற்காக, மரத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க பரிந்துரைத்த சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு ஆணையத்தின் (CEC) அறிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள்,

“சுற்றுச்சூழல் விஷயத்தில் கருணை காட்டக்கூடாது. அதிக எண்ணிக்கையிலான மரங்களை வெட்டுவது ஒரு மனிதனைக் கொல்வதை விட மோசமானது.  அனுமதியின்றி வெட்டப்பட்ட 454 மரங்களால் உருவாக்கப்பட்ட பசுமைப் போர்வையை மீண்டும் உருவாக்க குறைந்தபட்சம் 100 ஆண்டுகள் ஆகும்” என தெரிவித்து CEC பரிந்துரையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.

Tags :
CuttingMurderSupreme courtTrees
Advertisement
Next Article