வாடிக்கையாளர்களின் தரவுகள் திருட்டா? ஏர்டெல் நிறுவனம் மறுப்பு!
இந்தியாவில் அதிக பயனர்களை கொண்டுள்ள ஏர்டேல் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்படுவதாக எழுந்த புகார் தொடர்பான செய்திகளை ஏர்டெல் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தின் 37.5 கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் ஹேக் செய்யப்பட்டு பிரபல ஹேக்கிங் தளத்தில் விற்பனைக்கு வைப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியானது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஏர்டெல் இந்தியா தரவு மீறல் பற்றிய செய்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அத்துடன் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து அறிக்கை வெளியிட்ட ஏர்டெல் நிறுவனம், ‘இந்த விஷயத்தில் நாங்கள் ஒரு முழுமையான விசாரணையை தீவிரமாக மேற்கொண்டுள்ளோம். இதனையடுத்து ஏர்டெல் அமைப்புகளில் இருந்து எவ்வித விதி மீறலும் நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறோம்’ என தெரிவித்துள்ளது.
அந்த வகையில் வாடிக்கையாளர்களின் தரவு திருட்டானது டார்க் வெப் (Dark Web) தகவல் தொடர்பாளர்கள் மூலம் தெரியவந்ததாக கூறப்படும் நிலையில், மேலும் டார்க் வெப்பில் யார் என்ன பதிவு செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கும்என்றும்,
மேலும் ‘xenZen’ என்ற மாற்றுப்பெயருடன் ஹேக்கர் ஒருவர் 37.5 கோடிக்கும் அதிகமான இந்திய ஏர்டெல் வாடிக்கையாளர்களின் ஆதார் ஐடி, மின்னஞ்சல் ஐடி மற்றும் பல விபரங்களை உள்ளடக்கிய தரவுத்தளத்தை விற்க முயன்றார் என்னும் குற்றச்சாட்டுக்கு ஏர்டெல் நிறுவனம் அதிகாரபூர்வமாக மறுப்பு தெரிவித்து அதன் அதிகாரப்பூர்வ X-தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.