CSKvsRR | டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி - சென்னை அணி பேட்டிங்!
நடப்பாண்டு ஐபிஎல் போட்டியின் லீக் சுற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று(20) 62வது போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி, சஞ்சு சாம்சன் தலையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.
ஏற்கெனவே இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இந்த சூழலில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரு அணிகளுக்கிடையேயான போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கப்படவுள்ளது. இந்த நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
சென்னை அணி பிளேயிங் லெவன்:
ஆயுஷ் மத்ரே, டெவோன் கான்வே, உர்வில் படேல், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் பிரெவிஸ், சிவம் துபே, எம்எஸ் தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது அன்ஷுல் காம்போஜ், கலீல் அகமது.
ராஜஸ்தான் அணி பிளேயிங் லெவன்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன், ரியான் பராக், துருவ் ஜூரெல், ஷிம்ரான் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, யுத்வீர் சிங், க்வேனா மபாகா, துஷார் தேஷ்பாண்டே , ஆகாஷ் மத்வால்.