Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

CSKvsRR | நிதிஷ் ராணாவின் அதிரடி அரைசதம், சென்னை அணிக்கு 183 ரன்கள் இலக்கு!

சென்னை அணிக்கு 183 ரன்களை ராஜஸ்தான் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
09:36 PM Mar 30, 2025 IST | Web Editor
Advertisement

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி இன்று(மார்ச்.30) மூன்றாவது போட்டியை ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. பர்சபரா மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

Advertisement

ராஜஸ்தான் அணியில்  தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 4 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக களமிறங்கி சஞ்சு சாம்சன் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதற்கிட்டையில் நிதிஷ் ராணா அதிரடியாக விளையாடி 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் என மொத்தம் 81 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவருக்கடுத்து வந்த கேப்டன் ரியான் பராக் தனது பங்கிற்கு  37 ரன்கள் அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார். ஹெட்மியர் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவுகளில் 9 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி  182 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 183 என்ற இலக்கை நோக்கி சென்னை அணியினர் சேஸிங் செய்யவுள்ளனர்.

Tags :
CricketCskCSKvsRRIPL2025MSdhoniNitish RanaRiyanParagRuturajgaikwad
Advertisement
Next Article