CSKvsRCB | பெங்களூர் அணி பேட்டிங் - பழி தீர்க்குமா? சென்னை அணி!
நடப்பாண்டிற்கான ஐபிஎல் லீக் சுற்று நடைபெற்று வரும் நிலையில், தோனி தலைமையிலான சென்னை அணி, ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூர் அணியை இன்று(மே.03) எதிர்கொள்ள உள்ளது. முன்னதாக சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி தற்போது சின்னசுவாமி மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. முந்தைய ஆட்டத்தின் தோல்விக்கு சென்னை அணி பழி தீர்க்குமா என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சென்னை அணி பிளேயிங் லெவன்:
ஆயுஷ் மத்ரே, ஷேக் ரஷீத், சாம் கரன், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் பிரெவிஸ், தீபக் ஹூடா, எம்எஸ் தோனி , அன்ஷுல் காம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பதிரானா.
பெங்களூர் அணி பிளேயிங் லெவன்:
விராட் கோலி, ஜேக்கப் பெத்தேல், தேவதத் படிக்கல், ரஜத் படிதார், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குருணால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், லுங்கி நிகிடி, யாஷ் தயாள்.