Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

CSKvsPBKS | சாம் கரன் அதிரடி - சாஹலின் ஹாட்ரிக்கால் பஞ்சாப்புக்கு 191 ரன்கள் இலக்கு!

பஞ்சாப் அணிக்கு 191 ரன்களை சென்னை அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
09:49 PM Apr 30, 2025 IST | Web Editor
Advertisement

நடப்பு ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில்,  இன்று(ஏப்.30) தோனி தலைமையிலான சென்னை அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொண்டு வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

Advertisement

முதல் இன்னிங்ஸில் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஷேக் ரஷீத் மற்றும் ஆயுஷ் மத்ரே ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த சாம் கரண் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி வந்தார். இதனிடையே வந்த ஜடேஜா 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவருக்கடுத்து வந்த டெவால்ட் பிரெவிஸ் 32 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார். நீண்ட நேரம் களத்தில் நின்று 88 ரன்கள் குவித்த சாம் கரண் மார்கோ ஜான்சனிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்பு வந்த கேப்டன் தோனி 11 ரன்கள் அடித்து ரசிகர்களை சிறிது நேரம் மகிழ்வித்து சாஹலிடம் ஆட்டமிழந்தார்.

அதன் பின்பு களமிறங்கிய தீபக் ஹூடா, அன்ஷுல் காம்போஜ், நூர் அகமது ஆகியோர் சாஹல் சுழலில் சிக்கி விக்கெட்டை இழந்தனர். இதன் மூலம் அவர் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். 19.2 ஓவர்களில் ஆல் அவுட்டான சென்னை அணி 190 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 191 என்ற இலக்கை பஞ்சாப் அணி சேஸிங் செய்ய உள்ளது.

Tags :
chennaisuperkingsCricketCSKvsPBKSIPL2025MSdhoniPunjabKingsshreyasIyerYuzvendra Chahal
Advertisement
Next Article