Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#CSKvsLSG - லக்னோக்கு 211 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த சிஎஸ்கே!

09:54 PM Apr 23, 2024 IST | Web Editor
Advertisement

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக போட்டியில் அதிரடியாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது.

Advertisement

2024 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 39 ஆவது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் ரன்களுக்கு திணறிய சென்னை அணி நேரம் செல்ல செல்ல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் களமிறங்கிய தோனி 5 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியாக 20  ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. லக்னோ அணியில் மேட் ஹென்றி மோஸ்கான் மற்றும் யாஷ் தாக்கூர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Tags :
#SportsCricketCSKvsLSGIPLIPL2024LSGvsCSK
Advertisement
Next Article