CSKvsLSG | கேப்டன் ரிஷப் பந்த்தின் அதிரடி ஆட்டம் - சென்னை அணிக்கு 167 ரன்கள் இலக்கு
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான லீக் சுற்று நடைபெற்று வரும் நிலையில், இன்று(ஏப்ரல்.14) தோனி தலையிலான சென்னை அணி ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ அணியை எதிர்கொள்கிறது. உத்திர பிரதேசத்தில் நடக்கும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதல் இன்னிஸில் லக்னோ அணி சார்பில் ஐடன் மார்க்ராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஐடன் மார்க்ராம் 6 ரன்கள் அடித்து கலீல் அகமதிடம் விக்கெட்டை இழந்தார். இவருக்கடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 8 ரன்களில் அன்ஷுல் காம்போஜிடம் ஆட்டமிழந்தார். இதனிடையே நிதானமாக விளையாடி வந்த மிட்செல் மார்ஷ் 30 ரன்களில் ஜடேஜாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதையடுத்து கேப்டன் ரிஷப் பந்த் - ஆயுஷ் பதோனி ஆகியோர் சிறப்பாக விளையாடினர். இதில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் 63 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார். பதோனி 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த சமத் 20 ரன்கள் அடித்தார். மொத்தமாக 20 ஓவருக்கு 7 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 166 ரன்கள் அடித்தது. இதையடுத்து 167 என்ற இலக்கை சென்னை அணி சேஸிங் செய்து வருகிறது.