Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#CSKvsDC : அரைசதம் விளாசிய வார்னர், ரிஷப் பண்ட்... சிஎஸ்கே அணிக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி அணி!

09:31 PM Mar 31, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய ஐபிஎல் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. எனவே சென்னை அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

ஐபிஎல் தொடரின் 13வது போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் தொடங்கியது. ருதுராஜ் கெய்க்வாட்  தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி இதில் களமிறங்கியது. சென்னை அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வென்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அதேநேரம், டெல்லி அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

இதனால் ஹாட்ரிக் வெற்றி பெற சென்னை அணியும், ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க டெல்லி அணியும் முனைப்பு காட்டுகிறது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 19 முறையும், டெல்லி அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸை வென்று டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் பிரித்வி ஷா களமிறங்கினர். 10வது ஓவரை முஷ்தாபிஷூர் வீசிய முதல் பந்தில் வார்னர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை முஷ்தாபிஷூர் தவறவிட்டார். இருப்பினும் 3வது பந்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை பதிரனா கெட்டியாக பிடித்துக் கொண்டார். வார்னர் 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து ரிஷப் பண்ட் களமிறங்கினார். டெல்லி கேபிடல்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தது.

11 ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். 4வது பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் பிரித்வி. அவர் 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து மிட்செல் மார்ஷ் களமிறங்கினார். 15வது ஓவரை பதிரனா வீச 4வது பந்தில் மார்ஷ் போல்டானார். மார்ஷ் 12 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய ஸ்டப்ஸ் 2வது பந்தில் போல்டாகி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். டெல்லி கேபிடல்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது.

19வது ஓவரை பதிரனா வீச 5வது பந்தில் ருதுராஜிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பண்ட் 32 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். 20வது ஓவரை முஷ்தாபிஷூர் வீசினார். இந்த ஓவரில் மொத்தம் 12 ரன்களுடன் டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து சென்னை அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

Tags :
CSK v DCDavid warnerDC vs CSKIPL 2024MS DhoniNews7Tamilnews7TamilUpdatespathiranaRishabh PantRuturaj
Advertisement
Next Article