Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#CSKvKKR : டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு!

07:22 PM Apr 08, 2024 IST | Web Editor
Advertisement

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் லீக் ஆட்டத்தில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளது.

Advertisement

கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய ஐபிஎல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறதுஇதில்இதுவரை 21 லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இன்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடுகின்றன.

சிஎஸ்கே இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டில் வென்று, புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறதுகடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்ற சென்னை அணிஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க முனைப்பு காட்டுகிறதுஅதேநேரம்கொல்கத்தா அணியோ விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளதுஇன்றைய போட்டியிலும் வென்று முதலிடத்திற்கு முன்னேற தீவிரமாக உள்ளதுஎனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளார். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 18 முறையும்கொல்கத்தா அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.

கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு போட்டியில் சென்னை அணி அதிகபட்சமாக 225 ரன்களையும், குறைந்த பட்சமாக 114 ரன்களையும் பதிவு செய்துள்ளதுஅதேநேரம்சென்னை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 202 ரன்களையும், குறைந்த பட்சமாக 108 ரன்களையும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Next Article