Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#CSK vs RR: சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியின் டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு!

03:16 PM May 07, 2024 IST | Web Editor
Advertisement

CSK vs RR அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மே.9ம் தேதி தொடங்க உள்ளது.

Advertisement

டாடா ஐபிஎல் 17வது சீசன் போட்டி மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.  இதில் சென்னை,  பெங்களூரு,  மும்பை,  கொல்கத்தா,  ஹைதராபாத்,  டெல்லி,  பஞ்சாப்,  குஜராத், லக்னோ,  ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்த தொடரில் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இடையேயான போட்டியுடன் 55 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது.

இன்றைய 56 லீக் போட்டி டெல்லி கேப்பிடல்ஸ்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிகளுக்கிடையே டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மாலை 7.30 மணியளவில் நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள் : போதைப்பொருள் தடுப்பு சிறப்பு பிரிவின் செயல்பாடுகள் - உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு!

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில்  மே 12 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளன. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை,  வரும் 29ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மே 9ம் தேதி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ChennaiChepaukCricketCskCSKvsRRRRRRvsCSKTicket
Advertisement
Next Article