Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#CSKvsGT | குஜராத்தை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே அணி!

08:07 AM Mar 27, 2024 IST | Web Editor
Advertisement

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், 63 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 

Advertisement

17-வது ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டம், மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அதன்பின் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெற்ற நிலையில், சிஎஸ்கேவின் 2-வது போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (மார்ச் 26) நடைபெற்றது.

இதில், சென்னை அணி, சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ், பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்தது. இதையடுத்து பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணியின் ரவீந்திர ஜடேஜா 46 ரன்களும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 46 ரன்களும் எடுத்தனர்.  

அதன்பின் களமிறங்கிய ஷிவம் துபே, 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அசத்தினார்.  குஜராத் தரப்பில் ரஷீத் கான் சிறப்பாக பந்துவீசி நான்கு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன், மோஹித் சர்மா ஆகியோருக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது.  இதனைத் தொடர்ந்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. 

சாய் சுதர்ஷன் 37, சாஹா 21, டேவிட் மில்லர் 21, விஜய் சங்கர் 12 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து குஜராத் அணி தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த சிஎஸ்கே வீரர் ஷிவம் துபே ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

Tags :
Chennaichennai super kingsCskCSK vs GTGTGujarat TitansIPLIPL2024
Advertisement
Next Article