Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"CSK அணி கடைசி வரை சிறப்பாக விளையாடியது" - ஹர்பஜன் சிங் கருத்து!

10:46 AM May 19, 2024 IST | Web Editor
Advertisement

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள RCB அணிக்கு வாழ்த்துகள். சென்னை அணி கடைசி வரை நன்றாக போராடினார்கள் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 

Advertisement

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது.  இதுவரை 67 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன.  இந்நிலையில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 68வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிகொண்டன.

இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் பாப் டு பிளெஸ்சிஸ் ஆகியோர் களமிறங்கினர்.  இருவரும் இணைந்து 78 ரன்கள் சேர்த்த நிலையில், விராட் கோலி 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.  அவரை தொடர்ந்து டு பிளெஸ்சிஸ் உடன் ரஜத் படிதார் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த டு பிளெஸ்சிஸ் ரன் அவுட் ஆனார்.

பின்னர் கேமரூன் கிரீன் - படிதார் இணை ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர்.  படிதார் 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்தது.   இதனையடுத்து 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.  சென்னை அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களமிறங்கினர்.  இந்த ஜோடியில் கெய்க்வாட் முதல்பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.  அடுத்து களமிறங்கிய மிட்செல் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக ரவீந்திராவுடன், ரகானே ஜோடி சேர்ந்தார்.  இதில் ரகானே 33 ரன்களுக்கு கேட்ச் ஆனார்.  மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா 31 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார்.  தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 61 ரன்களில் ரன் அவுட் ஆனார்.  அவரைத்தொடர்ந்து ஷிவம் துபே 7 ரன்களும், சாண்ட்னர் 3 ரன்னும் எடுத்து வெளியேறினர்.

அடுத்ததாக ஜடேஜா மற்றும் தோனி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.  இந்த ஜோடி, அணியின் ரன்ரேட்டை வேகமாக உயர்த்தியது.  கடைசி ஓவரில், அதிரடி காட்டி வந்த தோனி 25 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.  முடிவில் இறுதிவரை போராடிய ஜடேஜா 42 (22) ரன்களும், ஷர்துல் தாக்கூர் 1 ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.  பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக யாஸ் தயாள் 2 விக்கெட்டுகளும், கேமரான் கிரீன், சிராஜ், பெர்குசன், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.  இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றதுடன்,  4-வது அணியாக 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறியது.

இந்த நிலையில் நேற்றைய போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளரும் முன்னாள் சிஎஸ்கே வீரருமான ஹர்பஜன் சிங் தெரிவித்ததாவது..

“ RCB அணி நேற்று ஒரு சாம்பியன் போல விளையாடினர். மழைக்கு பிறகு பந்து நன்றாக சுழன்றதால் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. ஆனால் விராட் கோலியும், ஃபாஃப் டூப்ளசியும் அற்புதமாக விளையாடினர். யாஷ் தயாளுக்கு இது பைசா வசூல் மேட்ச், கடைசி ஓவரில் அபாரமாக பந்து வீசினார். பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள RCB அணிக்கு வாழ்த்துகள். சென்னை அணி கடைசி வரை நன்றாக போராடினார்கள்” என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

Tags :
chennai super kingsCSK VS RCBHarbhajan singHarbhajan SinghIPLIPL2024RCB vs CSKRoyal Challengers Bengaluru
Advertisement
Next Article