Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#WhistlePodu | சென்னை போக்குவரத்து துறையின் ‘Zero is Good’ பிரசாரம் - சிஎஸ்கே அணி விழிப்புணர்வு வீடியோ வெளியீடு!

12:20 PM Aug 20, 2024 IST | Web Editor
Advertisement

ஆகஸ்ட் 26-ம் தேதியை சென்னைக்கு விபத்தில்லாத நாளாக கொடுக்க போக்குவரத்து துறை முடிவெடுத்துள்ள நிலையில், ‘Zero is Good’ பிரசாரத்திற்கு சிஎஸ்கே அணி விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளது.

Advertisement

உலகம் முழுக்க விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டு வருகின்றன. இதுபோன்ற விபத்துகளை கட்டுப்படுத்த என்ன செய்வது என்று சிந்தித்து சென்னை மாநகரப் போக்குவரத்து துறை 'Zero is Good' என்ற முயற்சியை கையில் எடுத்துள்ளது. இந்த முயற்சியின் மூலம் விபத்துகளை முற்றிலுமாகத் தடுக்க முடியாவிட்டாலும், இந்த முயற்சிக்கு முழு பங்களிப்பை அளிக்க போக்குவரத்து துறை முடிவெடுத்துள்ளது.

மேலும் இதற்கான விழிப்புணர்வையும் போக்குவரத்து துறை ஏற்படுத்தி வருகிறது. தலைக்கவசம் உயிர்க் கவசம் என்று தெரிந்தும், தலைக்கவசமின்றி வாகனம் ஓட்டுபவர்கள், செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டி விபத்துகள் ஏற்படுத்துபவர்கள், போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் விபத்தில் பலியானவர்கள், அனைத்து விதிமுறைகளையும் அனைவரும் பின்பற்றினால் நிச்சயமாக விபத்துகளைத் தடுக்க முடியும்.

இந்நிலையில் ஆகஸ்ட் 26-ம் தேதியை சென்னைக்கு விபத்தில்லாத நாளாக கொடுக்க போக்குவரத்து துறை முடிவெடுத்துள்ளது. அதன் ஒரு முயற்சியாக ‘Zero is Good’ என்ற பிரசாரத்திற்கு ஐபிஎல் அணிகளில் ஒன்றான, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது தொடர்பான விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் கேப்டன் ருதுராஜ், ரகானே, பிராவோ, துபே, ரச்சின் ரவீந்திரா, துஷார் பாண்டே ஆகியோர் விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags :
chennai super kingsChennai trafficCskNews7Tamilnews7TamilUpdatestraffic policeZero Accident DayZero is Good
Advertisement
Next Article