Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு!

09:10 AM Dec 29, 2023 IST | Web Editor
Advertisement

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

Advertisement

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்திருக்கிறார்.

இது குறித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது;

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி திருப்பதி ராயுடு, முதலமைச்சர் அலுவலகத்தில் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் நாராயண சுவாமி, எம்.பி பெத்தி ரெட்டி மிதுன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என குறிப்பிட்டு அதன் காணொலியையும் பதிவிட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் முட்லூரு கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘நான் விரைவில் ஆந்திர மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வருவேன்’. அதற்கு முன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களின் எண்ணவோட்டங்களையும், அவர்களின் பிரச்னைகளையும் அறிந்து கொள்ள முடிவுசெய்திருக்கிறேன்" என்று அம்பத்தி ராயுடு கூறியிருந்தார்.

சொன்னதைப்போலவே அம்பத்தி ராயுடு அரசியல் கட்சியில் சேர்ந்திருக்கிறார். மக்களவை தேர்தலுக்கு இன்னும் நான்கைந்து மாதங்களே இருக்கும் நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் அம்பத்தி ராயுடு இணைந்திருப்பதால், கட்சி சார்பாகத் தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags :
ambati rayuducricketerJagan Mohan ReddyNews7Tamilnews7TamilUpdatesYSRCP
Advertisement
Next Article