Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

WPL 2024 : பெங்களூரு அணியை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது டெல்லி!

06:58 AM Mar 01, 2024 IST | Web Editor
Advertisement

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Advertisement

மகளிர் ப்ரீமியர் லீக்-ன் இரண்டாவது தொடர் பிப்ரவரி 23-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ், யு.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் 2 முறை மோதும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். தொடர்ந்து 2, 3-வது இடங்களை பிடிக்கும் அணிகள், எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றில் களமிறங்கும்.

இதையும் படியுங்கள் : மத்திய அரசு வரிப்பகிர்வு – தமிழ்நாட்டிற்கு ரூ.5,797 கோடியும், அதிகப்பட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.25,495 கோடியும் விடுவிப்பு!

இந்நிலையில், பெண்கள் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.  அபாரமாக விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 50 ரன்களும், ஆலிஸ் கேப்சி 46 ரன்களும் விளாசினர்.

இதையடுத்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலசஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடி, நடப்பு தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

Tags :
CricketDCVsRCBdelhi capitalsRCBvsDCRoyal Challengers BangaloreWomensPremierLeagueWPL2024
Advertisement
Next Article