Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குளறுபடிகளால் நீட் தேர்வின் நம்பகத்தன்மை பாதிப்பு! - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து!

12:08 PM Jun 11, 2024 IST | Web Editor
Advertisement

முறைகேடு மற்றும் குளறுபடிகளால் நீட் தேர்வின் நம்பகத்தன்மை பாதிக்கபட்டுள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement

நிகழாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 574 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களில் கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது.  இதில்,  23.33 லட்சம் பேர் பங்கேற்றனர்.  தமிழ்நாட்டில் சென்னை,  மதுரை,  திருச்சி உட்பட 24 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 200 தேர்வு மையங்களில் 1.52 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.

நாடு முழுவதும் தமிழ்,  ஆங்கிலம்,  இந்தி,  தெலுங்கு,  கன்னடம்,  குஜராத்தி,  மராத்தி, ஒடியா,  அஸ்ஸாமி,  வங்காளம்,  உருது உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில்,  விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு பெற்று,  தேர்வு முடிவுகள் இணையப் பக்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 4) வெளியானது.  இதில் நாடு முழுவதும் மொத்தம் 13,16,268 (56.41%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே பீகார் மாநிலத்தில் நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியானது.  மேலும்,  நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததும்,  ஹரியாணாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் முதலிடம் பிடித்த  சம்பவங்கள் சர்ச்சையைக் கிளப்பின. இந்நிலையில,  நீட் தேர்வின் முடிவுகளை திரும்பப்பெற்று மறுதேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதையும் படியுங்கள் : ஹிஜாப் அணிய தடை – பணியை ராஜினாமா செய்த சட்டக் கல்லூரி ஆசிரியை!

நீட் தேர்வு குளறுபடி,  முறைகேடு விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது . நீட் தேர்வு குளறுபடி தொடர்பான வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத்,  அசாதுதீன் அமனுல்லா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீட் தேர்வு குளறுபடி,  முறைகேடு விவகாரம் தொடர்பான வழக்கில் பதிலளிக்க தேசிய தேர்வுகள் முகமைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  மேலும் நீட் கலந்தாய்வுக்கு தடைவிதிக்கக் கோரிய கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள்,  வழக்கு விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  மேலும் இதுபோன்ற குளறுபடிகளால் நீட் தேர்வின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags :
examNEETNEETUG2024scamstudentsSupremeCourt
Advertisement
Next Article