Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பட்டாசு ஆலை விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு!

03:31 PM Feb 21, 2024 IST | Web Editor
Advertisement

சிவகாசி அருகே ஆலங்குளம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட ஆட்சியருக்கும்,  காவல் கண்காணிப்பாளருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ராமு தேவன் பட்டியில் உள்ள தனியார்
பட்டாசு ஆலையில் கடந்த 17 ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் ஆலையில் பணிபுரிந்த 4 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.  மேலும் நான்கு தொழிலாளர்கள் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்ப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி ராஜ இளங்கோ,  சம்பவம் தொடர்பாக நான்கு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags :
AccidentfireFire accidenthuman rights commissionRamuthevanpattitamil naduVirudhunagar
Advertisement
Next Article