Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது - தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

07:12 PM May 02, 2024 IST | Web Editor
Advertisement
கோவாக்சின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 
கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படு உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தியாவில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டு பெரும்பாலானோருக்கு போடப்பட்டது.
இந்தியாவை பொறுத்தவரை, கோவிஷீல்டு, கோவாக்சின், மாடர்னா, ஸ்புட்னிக் V, ஜான்சன் அண்டு ஜான்சன், ஊசியில்லா தடுப்பூசியான சைகோவ்-டி உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ள மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது.
இருப்பினும், ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து விநியோகிக்கும் கோவாக்சின், புனே சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளே இந்தியாவில் பெரும்பாலானோருக்கு போடப்பட்டன. இந்த இரண்டு தடுப்பூசிகளும் தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்டு, பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டன.
இதனிடையே பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனெகா  தனது கொரோனா தடுப்பூசி குறித்து அந்நாட்டு நீதிமன்றத்தில் முக்கிய ரிப்போர்ட்டை தாக்கல் செய்துள்ளது. அதில், கொரோனா வேக்சின் எடுத்துக் கொண்ட வெகு சிலருக்கு மட்டும் TTS, அதாவது ரத்த உறைதல் பக்க விளைவு ஏற்பட்டுள்ளதாக அஸ்ட்ரா ஜெனெகா தெரிவித்துள்ளது.
அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா வேக்சின் தான் பல கோடி பேருக்குச் செலுத்தப்பட்டது. இந்தியாவிலும் இது தான் கோவிஷீல்ட் என்று பெயரில் மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பலருக்கும் தங்களுக்குத் தடுப்பூசியைப் போட்டதால் தங்களுக்கு எதாவது ஆபத்து ஏற்படுமா என அஞ்சுகிறார்கள்.
இந்நிலையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ரத்தம் உறைதல், இதய பிரச்சினை உள்ளிட்டவை கோவாக்சின் தடுப்பூசியால் ஏற்படாது என்றும் மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கப்பட்டது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது என்றும் கோவாக்சின் லைசன்ஸ் நடைமுறையின் போது சுமார் 27 ஆயிரம் வகைகளில் ஆய்வு செய்யப்பட்டது என்றும் பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
Advertisement
Tags :
Bharat BiotechCorona vaccineCOVAXINCOVISHIELD
Advertisement
Next Article