Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குற்றாலத்தில் அடிப்படை வசதிகளில் குறைபாடு - ஐயப்ப பக்தர்கள் குற்றச்சாட்டு!

08:29 AM Nov 27, 2023 IST | Web Editor
Advertisement

குற்றாலத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement

தென்காசி மாவட்டம்,  மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால
அருவிகளில் ஆண்டு தோறும் இரண்டு காலகட்டங்களில் சீசன் களைகட்டுவது வழக்கம். அந்த வகையில்,  தற்போது மழைக்கால சீசன் முடிந்த நிலையில், ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்கி உள்ளது.

இதனை தொடர்ந்து, ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கடந்த கார்த்திகை மாதம் 1-ம் தேதியிலிருந்து குற்றால அருவிக்கு வருகை தந்து நீராடி சென்று வருகின்றனர். மேலும், ஏராளமான வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்வதற்கு முன்பு குற்றால அருவிக்கு வருகை தந்து நீராடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:புதுச்சேரியில் பெய்து வரும் கனமழை | மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

அந்த வகையில், குற்றாலத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு எந்த விதமான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும்  குற்றாலத்திற்கு வரும் ஐயப்பன் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள் உணவு  வசதிகள் உள்ளிட்ட  வசதிகள் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனால் குற்றாலத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் சாலைகளில் ஓரமாக சமையல் செய்து  உண்ணும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதேபோல்,  சீசன் காலகட்டங்களில் கூடுதலாக தூய்மை பணியாளர்களை பணியமர்த்தாமல் உள்ளதால் ஆங்காங்கே குப்பைகள் சூழ்ந்த பகுதியாக குற்றாலம் காணப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக,  குற்றாலம் பகுதியில் நோய் தொற்று பரவும்  அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுற்றுலாப் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

Tags :
AyyappacoutralamdevoteesTamilNaduTenkasiTourists
Advertisement
Next Article