Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னையில் குற்றால அருவி - கோடை கொண்டாட்டம் கண்காட்சி தொடங்கியது!

04:49 PM May 17, 2024 IST | Web Editor
Advertisement

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதையடுத்து மதுரவாயலில் கோடை கொண்டாட்டம் குற்றாலம் 3.0 என்ற கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த மாதம் இறுதியில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், கோடை விடுமுறையை கொண்டாட பொதுமக்கள் சுற்றுலா தளங்களை நோக்கி படையெடுத்துள்ளனர். இந்நிலையில்,  மதுரவாயல் அடுத்த வானகரம் பகுதியில் கோடை கொண்டாட்டம் குற்றாலம் 3.0 என்ற
தனியார் கண்காட்சி திறக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சென்னையை சேர்ந்தவர்கள் ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் போன்ற  வெளி மாவட்டங்களுக்கு  சென்று கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள மக்கள் சிரமமின்றி கோடை வெயிலை மறந்து உற்சாகமாக கொண்டாடும் வகையில் பிரம்மாண்டமாக கண்காட்சி
திறக்கப்பட்டுள்ளது.

கண்காட்சியில் குற்றால அருவியில் குளிப்பது போன்ற நீர்வீழ்ச்சி, ராட்சத ராட்டினங்கள், கிணற்று மோட்டார், சைக்கிள் சாகசம், வனவிலங்கு கண்காட்சி என பல்வேறு விளையாட்டுக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  இதையடுத்து பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக இந்த காண்காட்சிக்கு வருகை தந்து விளையாடி மகிழ்ந்து செல்கின்றனர்.

இதையும் படியுங்கள் : “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறார்” – நடிகை ஸ்ரேயா ரெட்டி

குறிப்பாக கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் குற்றால அருவி போன்ற காட்சிப்படுத்தப்பட்டுள்ள நீர்வீழ்ச்சியில் பலரும் தங்களது குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். சென்னையில் இருந்து பலரும் வெளி மாநிலங்களுக்கு சென்று கோடை விடுமுறையை கொண்டாடி வரும் நிலையில் சென்னையிலையே கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க திறக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி பொதுமக்களை
வெகுவாக கவர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
ChennaiCourtallam fallsExhibitionMaduravayalSummer Celebration
Advertisement
Next Article