Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விஷச்சாராய விவகாரம் | உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த தமிழ்நாடு அரசு!

11:35 AM Jun 20, 2024 IST | Web Editor
Advertisement

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Advertisement

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 34 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும்,  மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருபவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதோடு,  கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த  உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags :
CM MK StalinCMO TamilNaduKallakurichiKarunapuramSpurious Liqour
Advertisement
Next Article