ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல் - இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
ஊழல் குறியீடு பட்டியலை 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' அமைப்பு வெளியிட்டுட்டுள்ளது. அதில் இந்தியாவுக்கு 93-வது இடம் கிடைத்துள்ளது.
ஊழல் குறியீட்டு பட்டியலை அரசு சாரா அமைப்பான 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. உலகில் உள்ள 180 நாடுகளில் இந்த அமைப்பு ஆய்வு மேற்கொண்டு உழல் நடைபெற்றுள்ள நாடுகளின் பட்டியலை வரிசைப்படுத்துகிறது. நிர்வாக வெளிப்படைத்தன்மை, லஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் போன்றவற்றை காரணிகளாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
100 மதிப்பெண்களை மையமாக வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதாவது 100-க்கு 100 மதிப்பெண்கள் பெறும் நாடு ஊழலற்ற நாடு என்ற வகையில் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வழங்கப்படுகிறது. பூஜ்ய (0) மதிப்பெண் பெறும் நாடு ஊழல் மிகுந்த நாடாக குறிப்பிடப்படுகிறது.
இதையும் படியுங்கள்: இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் - இன்று நாடாளுமன்றத்திற்கு திரும்புகின்றனர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள்.!
இந்த நிலையில் 2023-ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' அமைப்பு நேற்று (ஜன.30) வெளியிட்டது. இந்த பட்டியலில் டென்மார்க் 90 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், 87 மதிப்பெண்கள் பின்லாந்து 2-ம் இடத்தையும், 85 மதிப்பெண் பெற்று நியூசிலாந்து 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன.
இந்தப் பட்டியலில் இந்தியா 2022-ம் ஆண்டு 85-வது இடத்தில் இந்தியா இருந்தது. ஆனால் 2023-ம் பட்டியலில் 8 இடங்கள் பின்தங்கி 93-வது இடத்தைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் 5-வது இடத்தையும், ஆஸ்திரேலியா 14-வது இடத்தையும், ஜப்பான் 16-வது இடத்தையும், தென் கொரியா 32-வது இடத்தையும், சீனா 76-வது இடத்தையும் பிடித்துள்ளன. மேலும், இலங்கை 115-வது இடத்தையும் மற்றும் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 133-வது இடத்தையும் பிடித்துள்ளன.