#Europe -ல் பரவும் புதியவகை கொரோனா! அறிகுறிகள் என்ன?
ஐரோப்பாவில் XEC எனப்படும் புதியவகை கொரோனா தொற்று பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டில் சீனாவில் முதல் முதலில் பரவ தொடங்கிய கொரோனா தொற்று அடுத்தடுத்த ஆண்டுகளில் உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில், இப்போது வரை சுமார் 70 கோடி பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதில், 6.75 கோடி பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. கொரோனா தடுப்பூசிகள் மூலம் தொற்று பரவல் கட்டுப்பட்டுத்தப்பட்டன.
இதையும் படியுங்கள் :AssemblyElections – ஜம்மு-காஷ்மீரில் தொடங்கியது முதல்கட்ட வாக்குப்பதிவு!
இந்நிலையில், தற்போது மீண்டும் தொற்று பரவல் தீவிரமெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ஐரோப்பாவில் புதியவகை கொரோனா தொற்று பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் XEC எனப்படும் புதியவகை கொரோனா தொற்று பரவுவதாக தகவல் தெரிவித்துள்ளன. இது ஓமிக்ரான் தொற்றின் இரண்டு துணை வகைகளிலிருந்து உருவாகியுள்ளது. இந்த தொற்றின் பாதிப்பு ஜூன் மாதத்திலேயே கண்டறியப்பட்டுள்ளது. காய்ச்சல், தொண்டை புண், இருமல், உடல் வலி, சோர்வு, பசியின்மை உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.