Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா... தமிழ்நாட்டில் இத்தனை பேருக்கு பாதிப்பா?

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
03:39 PM May 20, 2025 IST | Web Editor
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துச் சென்றது. ஊரடங்களு, தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது.  இந்த நிலையில், கொரோனா தொற்று தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.

Advertisement

இதையும் படியுங்கள் : “எங்கள் பிரிவுக்கு 3வது நபரே காரணம்” – ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

இந்தியாவில் 257 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு லேசான பாதிப்புதான் இருப்பதாகவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

மேலும், தமிழ்நாட்டில் மட்டும் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் இருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளாவில் 69 பேருக்கும், மஹாராஷ்டிராவில் 44 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
Coronacorona viruscovid 19Healthhospitalnews7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article