கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா - ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை!
கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாக தினசரி பாதிப்பு 10-ஆக பதிவான நிலையில், நேற்று(டிச.13) ஒரே நாளில் 230 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 949-ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்கள் : அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் செலுத்தலாம் – மின்வாரியம் அறிவிப்பு!
கேரள சுகாதாரத்துறையின் தரவுகளின்படி கடந்த திங்கள்கிழமை மட்டும் 11,700 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு வந்ததில், 170 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு தினசரி 1.20 லட்சம் பேர் தரிசனத்துக்காக சென்று கொண்டிருப்பதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் சுமார் 12 மணிநேரம் நெரிசலில் காத்திருக்கும் சூழல் நிலவுவதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், சபரிமலைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் செல்வதால், அவர்களுக்கு முன் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.