Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கோபா அமெரிக்க கோப்பை : 16வது முறையாக வென்று சாதனை படைத்த அர்ஜெண்டினா - உடைந்து அழுத மெஸ்ஸியின் படங்கள் வைரல்!

11:40 AM Jul 15, 2024 IST | Web Editor
Advertisement

கோபா அமெரிக்க கோப்பையை 16வது முறையாக வென்று அர்ஜெண்டினா அணி சாதனை படைத்த நிலையில் காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறிய மெஸ்ஸி உடைந்து அழும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement

கோபா அமெரிக்க கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வந்தது. பெரும் எதிர்பார்ப்புடன் துவங்கிய இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா மற்றும் முன்னாள் சாம்பியன் கொலம்பியா அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறி இன்று விளையாடின.  இறுதி போட்டியில் 1-0 என்ற கணக்கில் அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 அர்ஜெண்டினா மற்றும் கொலம்பியா அணிகள் மோதிய இறுதிப்போட்டியில்  ஒதுக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதையடுத்து கூடுதலாக 30 நிமிடங்கள்  ஒதுக்கப்பட்டது.  இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்ட அர்ஜெண்டினா அணி 112வது நிமிடத்தில் கோல் அடித்தது.

அர்ஜெண்டினா வீரர் மார்டின்ஸ் கோல் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.  இதன் மூலம் அர்ஜெண்டினா அணி 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால், கொலம்பியா அணியால் இறுதிவரை கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதனால், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இதன் மூலம் அர்ஜெண்டினா அணி 16முறை கோபா அமெரிக்க கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இந்த போட்டியின் வெற்றி மூலம் கோபா அமெரிக்கா கோப்பையை அதிகமுறை வென்ற அணி என்கிற சாதனையை அர்ஜெண்டினா அணி படைத்துள்ளது. இதற்கு முன்  உருகுவேவின் 15முறை கோபா அமெரிக்க கோப்பையை கைப்பற்றியதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் போட்டியின் நடுவே இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காமல் பெரும் பதற்றமாக ஆட்டம் சென்றுகொண்டிருந்தது. சரியாக போட்டியின் 64வது நிமிடத்தில் மெஸ்ஸி தனது கணுக்காலைப் பிடித்துக் மைதானத்திலேயே வலியுடன் விழுந்தார்.   போட்டியின் போது அவர் தனது வலது பாதத்தை தவறான வகையில் ஊன்றியதால் அவருக்கு வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காயம் காரணமாக அவருக்கு பதிலாக நிக்கோலஸ் கோன்சாலஸ் களமிறங்கினார்.


என்னதான் மெஸ்ஸி வலியால் துடித்து அறைக்கு திரும்பினாலும் அவரது எண்ணம் முழுக்க மைதானத்திலேயே இருந்தன. தன்னால் கோல் அடிக்க முடியாமல் வலி காரணமாக மைதானத்திலிருந்து திரும்பியது நினைத்து அவர் கதறி அழத் தொடங்கினார். அவர் அழும் காட்சிகள் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து அவரை உற்சாகப்படுத்த ரசிகர்கள் மெஸ்ஸி என கத்தி உற்சாகப்படுத்தினர்.

Tags :
arjentinaArjentina vs ColumbiaCOPAfoot ballLionel Messi
Advertisement
Next Article