Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Coolie படத்தில் சத்யராஜின் கதாபாத்திரம் - Poster வெளியிட்டு சர்பிரைஸ் கொடுத்த படக்குழு!

06:40 PM Aug 31, 2024 IST | Web Editor
Advertisement

ரஜினிகாந்தின் கூலி படத்தில் இடம்பெற்றுள்ள சத்யராஜின் கதாபாத்திரம் குறித்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது

Advertisement

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா, ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், நாசர் மற்றும் அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் நடிக்கும் ஸ்ருதி ஹாசனின் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. இதில், ப்ரீத்தி என்கிற கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். முன்னதாக மலையாள நடிகர் சௌபின் சாகிர் நடிப்பதையும், பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா நடிப்பதையும் கூலி படக்குழு உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சத்யராஜின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அவர் இப்படத்தில் ராஜசேகர் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
CoolieRajinikanthSathyaraj
Advertisement
Next Article